வேட்பாளரை அறிவிப்பதற்காக நடத்தப்படவில்லை

Friday, 16 August 2019 - 13:54

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்பதற்காக நடத்தப்படவில்லை என்று, கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பில், டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 3ம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது.

இது வேட்பாளரை அறிவிக்கும் மாநாடு இல்லை.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உரிய தருணத்தில் சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.