தலைமன்னாரில் ஒரு கோடி பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

Friday, 16 August 2019 - 14:46

%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தலைமன்னார் கடற்பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடற்படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 452 கிலோகிராம் ஹெரோயின், ஆயிரத்து 397 கிலோகிராம் கேரளா கஞ்சா மற்றும் 29 ஆயிரத்து 9 கிலோகிராம் பீடி இலைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.