கிளிநொச்சியில் புகையிரத விபத்து: ஒருவர் காயம்

Friday, 16 August 2019 - 15:10

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
புகையிரத கடவையை கடக்க முற்பட்ட சிற்றூர்ந்து ஒன்று புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலாவ புகையிரத நிலையத்திற்கு குறித்த புகையிரதம் சென்றுக்கொண்டிருந்த போது, புகையிரத கடவையை கொண்ட குறுக்கு வீதியொன்றில் சிற்றூர்ந்து பயணிக்க முற்பட்ட வேளையில், மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிற்றூர்ந்தில் பயணித்த ஒருவரே இவ்வாறு காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இல்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்புச் சேவைக்கு எந்தவொரு ஊழியரும் சேவையில் இல்லையென பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.