பிரபல நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை சற்றுமுன்னர் சுற்றிவளைத்த முப்படையினர்..!! காணொளி

Wednesday, 21 August 2019 - 11:05

+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனின் வீட்டின் பின்புறத்தில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரனின் வீட்டின் பின்புறத்தில் விடுதலை புலிகளால் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்பதற்காகவே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

எனினும் தன்னை பழிவாங்குவதற்காகவே இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என எமது செய்திபிரிவிடம் ஶ்ரீதரன் தெரிவிக்கின்றார்.