ஈரான் மீது குற்றச்சாட்டு

Thursday, 19 September 2019 - 8:38

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+
இரண்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக சவுதி அரேபியா குற்றம் சுமத்தியுள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் சிதைவுகள் இதனை நிரூபிப்பதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சு தெரிவத்துள்ளது.

18 ஆளில்லா விமானங்கள் மற்றும் 7 ஏவுகணைகள் மூலமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் தாமே உள்ளதாக யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறிருப்பினும், அதனை நிராகரித்துள்ள ஈரான், தம்மை இலக்கு வைக்கும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளது.