ட்ரம்பை சந்திக்கவுள்ள மோடி

Thursday, 19 September 2019 - 13:34

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த மாதம் இரண்டு தடவைகள் சந்திக்க உள்ளனர் என அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
 
இந்த நிலையில், பொதுச் சபை கூட்டத்தின்போது முறைசாரா சந்திப்புக்கு அப்பால், இடம்பெறவுள்ள மற்றுமொரு சந்திப்பிலும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர் என அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.