20 பேர் பலி

Thursday, 19 September 2019 - 20:43

20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
தெற்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 20 பேர் பலியாகினர்.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரக் ரக வாகனம் ஒன்று, கலாட்டி நகரின் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து வெடிக்கச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலை தலிபானிய பயங்கரவாதிகளே நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் வைத்தியர்கள் மற்றும் நோயாளிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 15 பொதுமக்கள் பலியானதாக கூறப்படுகிறது.

அங்கு நடைபெறும் போரால், கடந்த மாதம் மாத்திரம் 473பொதுமக்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 


இந்தியாவில் தீ விபத்து எண்மர் பலி
Thursday, 06 August 2020 - 10:31

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள... Read More

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 75ஆம் ஆண்டு நினைவு தினம்
Thursday, 06 August 2020 - 9:22

இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின்... Read More

டுபாயில் தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Thursday, 06 August 2020 - 8:51

டுபாய் அஜ்மன் சந்தை தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல்... Read More