ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் - காணொளி

Friday, 20 September 2019 - 7:59

+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
வத்தளை -ஹேகித்த சந்தியில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

இன்று அதிகாலை 6.30 மணியளவில் இவ்வாறு தீ பரவியுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு பெலியாகொட நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் வெலிசர கடற் படை முகாம் உத்தியோகத்தர்கள் , வத்தளை காவற்துறை இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, தீ பரவலினால் கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.