29 சதவீதமான பறவைகள் அழிவு

Friday, 20 September 2019 - 8:09

29+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பறவைகளின் எண்ணிக்கை கவலைக்கிடமான நிலையை அடைந்துள்ளது.

புதிதாக மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வு நடவடிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

புதிய ஆய்வின்படி அமெரிக்கா மற்றும் கனடாவில் 3 பில்லியனுக்கும் குறைவான பறவைகளே உள்ளன.

1970ம் ஆண்டுக்குப் பின்னர் வட அமெரிக்காவில் 29 சதவீதமான பறவைகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய நாடுகளிலும் இதேநிலைமை நிலவுகிறது.

குறிப்பாக இந்தோனேசியாவில் கூடுகளில் அடைத்து வளர்க்கப்படுகின்ற பறவைகளின் எண்ணிக்கையை காட்டிலும், வனங்களில் வசிக்கின்ற பறவைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.