தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Friday, 20 September 2019 - 11:49

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
வத்தளை - ஹேக்கித்தையில் உள்ள  அடுக்குமாடி ஆடையகம் ஒன்றில் இன்று பரவிய தீ மின்சார கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறை அதிகாரி ஒருவர் இதனை எமக்கு தெரிவித்தார்.

இன்று காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த, பேலியகொடை நகரசபைக்கு சொந்தமான ஐந்து தீயணைப்பு வாகனங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

அதற்கு மேலதிகமாக வெலிசரை கடற்படை முகாம் அதிகாரிகளும் வத்தளை காவற்துறையினரும் இணைந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை மஸ்கெலியா - சாமிமலை - கொழும்பு தோட்டத்தில் 28 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தீப்பரவல் காரணமாக 12 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.