கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றம்...!

Friday, 20 September 2019 - 16:58

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D...%21
கொழும்பு புறக்கோட்டை மத்திய புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத பயனாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டு மற்றும் பருவகால  அனுமதி சீட்டு ஆகியவற்றிற்கான பணத்தை மீள வழங்குமாறு கோரியதன் காரணமாக இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத நிலைய அதிபர்கள், இயந்திர பொறியியலாளர்கள், மற்றும் பல்வேறு புகையிரத தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அலுவலக சேவைகளுக்கான புகையிரத சேவை தாமதமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொடவை எமது செய்தி  பிரிவு தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், அலுவலக சேவைகளுக்கான புகையிரத சேவை மிகவும் தாமதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் அநேகமான புகையிரத செலுத்துனர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளமையினால் அவர்களின் பாதுபாப்பினை உறுதி படுத்த பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.