சிற்றூர்தியில் மோதிய உந்துருளி - இளைஞர் பலி..

Sunday, 22 September 2019 - 11:32

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+-+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
வெல்லவாய – மொனராகலை வீதியில் ஆனபல்லம பகுதியில் உந்துருளியொன்றும், சிற்றூர்தியொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தல திசையிலிருந்து பயணித்த பேருந்து ஒன்றை முந்தி செல்ல முயற்சித்த போது எதிரே வந்த சிற்றூர்தியில் இளைஞர் செலுத்திய உந்துருளி மோதுண்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனபல்லம பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.