பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித்தை சந்திக்கவுள்ள சபாநாயகர்..

Sunday, 22 September 2019 - 13:00

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D..
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சந்திக்க உள்ளார்.

கொழும்பில் இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக சபாநாயகருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டை எட்டுவதற்காக இதன்போது விரிவான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், சபாநாயகருடன் இடம்பெறும் சந்திப்பை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவும் இந்த வாரம் கூடவுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியின் ஊடாக மாத்திரம் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுதி தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சம்பிரதாயபூர்வமாக கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறும் நிலையில், இம்முறை செயற்குழுக் கூட்டத்தை அலரி மாளிகையில் நடத்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.