பேருந்து விபத்தில் 22 பேர் பலி

Sunday, 22 September 2019 - 16:41

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+22+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரிலிருந்து ராவல்பிண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த பேருந்து சிலாஸ் மாவட்டத்தில் சென்ற போது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக அங்கிருந்த மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளததோடு 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் 24 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.