வெளிநாட்டுப் படைகளால் வலைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Sunday, 22 September 2019 - 19:10

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
வெளிநாட்டுப் படைகள் வலைகுடா நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு தமது படைகளை அனுப்புவதாக அமெரிக்க நேற்று அறிவித்திருந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் படைகள் எப்போதும் வலியையே தந்ததாகவும், எனவே ஆயுதப் போட்டியில் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வலைகுடாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் முன்வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை. தமது எரிபொருள் களஞ்சியங்கள் மீது, ஈரான் தரப்பிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், ஈரானுக்கு எதிராக யுத்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்து சவுதி அரேபியா பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா வான் தாக்குதல் மற்றும் ஏவுகணை என்பன ஈரானில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சவுதி அரேபிய இராஜாங்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் அடேல் அல்-ஜூபியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவை ஈரானிய மண்ணில் இருந்து ஏவப்பட்டது என்பது உறுதியாகும் பட்சத்தில் நாம் மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியா, பிரச்சினைகளை சமாதான முறையிலேயே தீர்க்க விரும்பும் தன்மையை கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.