ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்- மோடி

Monday, 23 September 2019 - 7:56

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் மீண்டும் ட்ரம்ப் அதிபராக பதவியேற்க ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ட்ரம்ப் முன்பாகவே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்றும் அவர் கடுமையாக சாடினார்.

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி மோடி எனும் பிரமாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடைபெற்றது.

அரங்கதிற்குள் பிரதமர் மோடி நுழைந்ததும், அங்கிருந்த 50 ஆயிரம் இந்தியர்களும் எழுந்து நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.