இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

Monday, 23 September 2019 - 7:45

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் 6.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலுகு தெங்கரா பராத் மாவட்டத்தில் இருந்து 165 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நிலஅதிர்வை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்தோனேசியாவில் தொடர்ந்தும் இவ்வாறான நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.