களுத்துறையில் கப்பம் பெறுவதற்கு முயற்சித்த இரண்டு பேர் கைது

Monday, 23 September 2019 - 8:04

%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
களுத்துறை - நாகொடை மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரின் மனைவி மற்றும் அவரது 8 வயதான மகளை கடத்தி பணம் பெற திட்டமிட்டமை தொடர்பில் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் களுத்துறை மற்றும் தொடங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கபபட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து காவல்துறையினரின் சீருடைகள்,வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.