கோட்டாபய உள்ளிட்ட 8 பேர் விடுதலை

Monday, 23 September 2019 - 10:21

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
அவன்கார்ட் நிறுவனத்துக்கு, மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலான வழக்கில் இருந்து சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து கையூட்டல் மற்றும் ஊழல் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணைகள் மன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கானது சட்டவிரோதமான முறையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் தொடுக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றிற்கு தெரியப்படுத்தினார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அறிக்கையை இன்றையதினம் மன்றில் சமர்ப்பிக்குமாறு பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிக்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் இன்று மன்றில் சமர்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் அறிக்கையை ஆராய்ந்த நீதவான் அதற்கமைவாக குறித்த வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.