பிரபல தோமஸ் குக் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்

Monday, 23 September 2019 - 12:43

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இலண்டன் நகரை மையமாக கொண்ட சுற்றுலா ஏற்பாட்டாளரான தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பிரித்தானிய பொது வான் போக்குவரத்து ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 150,000 க்கும் மேற்பட்ட பிரித்தானிய விடுமுறை சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்காக இந்நிறுவனம் பெரிதும் பங்களிப்பு செலுத்தியுள்ளது.

அந்த மிகப் பெரிய நிறுவனம் செயற்பாடுகளை முடக்கியுள்ளமை மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என்று தோமஸ் குக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான பீற்றர் பேங்கோசர் (Peter Fankhauser) தெரிவித்துள்ளார்.

தோமஸ் குக் நிறுவனத்தின் முடக்கமானது பிரித்தானியாவில் 9,000 ஊழியர்களின் தொழில்வாய்ப்புகளையும், உலகளவில் 22,000 ஊழியர்களின் பணிகளையும் இழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.