முதன் முறையாக இப்படியொரு தீர்ப்பு - முல்லைத்தீவு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பால் அதிர்ந்து போன ஞானசார தேரர்...!

Monday, 23 September 2019 - 12:53

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D...%21
புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் விகாரை அமைந்து தங்கி இருந்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி தேரர், புற்று நோய் காரணமாக கொழும்பில் நேற்றுமுன்தினம் காலமானார்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அவருடைய பூதவுடலுக்கான இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதற்கு எதிராக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் வழக்க தொடரப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

இதன் பிரகாரம் வழக்கை விசாரித்த நீதிமன்று அவரது பூதவுடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவிட்டதுடன், அவருக்கு சமாதி அமைக்க தடை விதித்ததாகவும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.