முழு முயற்சியையும் தாம் மேற்கொள்ள தயார்

Monday, 23 September 2019 - 20:19

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரஃப்கானி ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் நியூயோர்க் நோக்கி இன்று காலை பயணமாகினார்.

வாநூர்தியில் ஏறுவதற்கு முன்னர் ஊடகவியலாளர் மத்தியில் அவர் உரையாற்றிய போது, இந்த பயணித்தின் போது, ஈரானுக்கு தற்போது ஏற்பட்டுள்ள களங்கத்தை அகற்றுவதற்கான முழு முயற்சியையும் தாம் மேற்கொள்ள போவதாக தெரிவித்தார்.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த ஏனைய நாடுகளின் உதவியினை தாம் நாடவுள்ளதாக தெரிவித்தார்.

இதுதவிர, பாரசீக குடாவில் உள்ள நாடுகளுக்கு இடையே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலான ஈரானின் திட்டம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வின் போது சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதனை அடுத்து, கடந்த வருடம் மே மாதம் முதல் அமெரிக்க ஈரானிய உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஈரானுக்கு எதிராக பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.

இதுதவிர, செப்டம்பர் 14 ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக பகை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமது நிலைப்பாட்டை ஏனைய நாடுகளுக்கு ஒரே மேடையில் கொண்டு வந்து நீதி கோரப்போவதாகவும் ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.