வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி ..

Saturday, 12 October 2019 - 18:12

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+..
கெபிதிகொல்லேவ-பதவிய பிரதான வீதியில் கல்கந்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெபிதிகொல்லேவயில் இருந்து பதவிய நோக்கி பயணித்த மகிழுர்தி ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதியதாலே குறித்த விபத்து இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த உந்துருளியின் சாரதி மற்றும் மற்றைய நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், உந்துருளியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 53 வயதுடைய கெபிதிகொல்லேவ சமாதிகத பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.