உயிரை தியாகம் செய்தேனும் மக்களை காப்பாற்றுவேன்..

Saturday, 12 October 2019 - 21:33

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D..
உயிரை தியாகம் செய்தேனும் மக்களை காப்பாற்றுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார, சமூக மேம்பாடு என்பனவற்றையும் அதற்கு மேலதிகமாக பொதுமக்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனரா என்பதை ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் அதனை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது எதிர்கால நடவடிக்கைகளாக சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தல், பாதுகாப்பு வழங்குதல், தொழில்வாய்ப்பு, நிர்மாண பணிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பவர் பொதுமக்களின் மத்தியில் செல்பவர்களாக இருக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜி;த் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.