காணிகளை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பதற்ற நிலை..

Saturday, 12 October 2019 - 19:30

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88..
அம்பாறை - அட்டாளைச்சேனை - ஒலுவில் பகுதியில் உள்ள அரச காணிகளை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரதேசவாசிகளால்; இதற்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் தொடர்பில் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தேர்தல்கள் திணைக்களம் சுற்றுநீருபம் ஒன்றை அனுப்பி வைத்ததை தொடர்ந்து அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.