கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு..

Saturday, 12 October 2019 - 19:02

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தாங்கள் இந்த ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.