ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து செயல்படுவேன்..

Saturday, 12 October 2019 - 19:38

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D..
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜனாதிபதியுடன் இணைந்து வலுவாக முன்னோக்கி செல்லவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிரிதலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் எதிர்கொண்ட முதல் தேர்தலாக எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் அமைந்தது.

அவ்வாறானதொரு தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக வெற்றியை தம்மால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும், குறித்த தேர்தல் ஊடாக பொதுமக்கள் சிறந்த தீர்வொன்றை வழங்கியுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.