மீனவர் ஒருவர் கடலில் இருந்து சடலமாக மீட்பு

Saturday, 12 October 2019 - 19:09

+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95++%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடலில் நிர்க்கதியான நிலையில் ஆமையின் குருதியை தினமும் அருந்தி இறந்த சக மீனவரின் உடல் கடலில் இருந்ததாக சாய்ந்தமருது மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 18 மாளிகைக்காடு பகுதியில் இருந்து 3 மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றனர்.

தாங்கள் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் கடலில் நிர்கத்தியாகியிருந்தனர்.

இதன்போது, அவர்களில் ஒருவர் சுகயீனம் காரணமாக மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இறந்தவரின் உடலுடன் 6 நாட்களாக படகில் தத்தளித்துள்ளதுடன் அதனை அந்த அவரது கடலுக்கு எறிந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், தெய்வேந்திரமுனை மீனவர்களின் உதவியுடன் திருகோணமலை கடற்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த மீனவர்கள் நேற்று முன்தினம் சம்மாந்துறை காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்.