ஜப்பான் செல்லும் வானுர்தி 7 மணி நேரம் தாமதம்..

Saturday, 12 October 2019 - 19:18

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+7+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக அங்கு செல்லும் வானுர்தி 7 மணி நேரம் தாமதமாகியே பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் வான் சேவை நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

அந்த சூறாவளி இன்று பிற்பகல் ஜப்பானை கடக்கவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய இன்று இரவு 7.15 அளவில் ஜப்பான் - நரீடா நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான யூ.எல். 460 ரக வானுர்தி நாளை அதிகாலை 2.15 அளவில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களை 0 117 77 19 79 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கன் வானுர்தி சேவை தெரிவித்துள்ளது.