ஜப்பானை தாக்கியது 60 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற சூறாவளியே..

Saturday, 12 October 2019 - 19:24

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+60+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87..
ஜப்பானை தாக்கியுள்ள பாரிய சூறாவளியானது 60 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற சூறாவளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்கியோவிற்கு அருகாமையில் நில சரிவு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மணிக்கு 111 மைல் வேகத்தில் தொடரும் சூறாவளியின் தாக்கத்தால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்பதுடன் மேலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஜப்பானிய வளிமண்டலவியல் மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

அசாதாரண இயற்கை அனர்த்தத்தை அடுத்து உலக கிண்ண ரக்பி போட்டிகள் மற்றும் ஜப்பான் கிறான் பிரீ  மோட்டார் வாகன போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வர்த்தக அங்காடிகளில், குறிப்பாக உணவு பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளன.

இதற்கு காரணம், சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன், மக்கள் அதிக அளவிலான உணவு பொருட்களை வாங்கி சேகரித்ததனாலேயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாநூர்தி மற்றும் தொடரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இது தவிர, தொழிற்சாலைகள் அனைத்தும் செயலிழந்து போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் செய்தி

நேபாளத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.

யாத்திரிகர்களை ஏற்றிக் கொண்டு காத்மண்டு நோக்கி பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த 108 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் சென்றமையே விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்;டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.