வளமான நாட்டை உருவாக்க முன்னின்று செயற்படுவேன்- கோட்டாபய

Saturday, 12 October 2019 - 20:43

+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF
சிறந்த வளமான நாடொன்றை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை நிறைவேற்ற தாம் தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யட்டியாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தூரநோக்கு சிந்தனை இன்றிய ஆட்சிக் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் போது சகல மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமது கொள்கைகளின் அடிப்படையில் தற்போது தொழில் கோரும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களது சேவைகளை நாட்டிற்கு பெறுமதியான வகையில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

அதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணந்து செயற்பட ஆரம்பித்துள்ளதால் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.