கனமழை காரணமாக வெலிமடை பகுதியில் பெண் உட்பட மூவருக்கு நேர்ந்த பரிதாபம்..!

Sunday, 13 October 2019 - 7:41

%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21
வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் உள்ள தற்காலிக வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலியாகினர்.

நேற்றிரவு 9.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நான்கு பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவரும், 18 வயதுடைய பெண்ணும் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், காயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.