இந்திய பயணம் குறித்து சீன ஜனாதிபதி அறிக்கை

Sunday, 13 October 2019 - 7:25

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இந்தியாவும், சீனாவும் தங்களது அபிவிருத்தி தொடர்பில் பார்வையைத் தேர்ந்தெடுத்து, மூலோபாய பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் விஜயம் தொடர்பில், பயணத்தின் இறுதியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கண்ணோட்டத்திலிருந்தும், சீனாவும் இந்தியாவும் நல்ல அயல் நாடுகளாகவும் நல்லிணக்கமாகவும் வாழக்கூடிய நல்ல பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும் ஸீ ஜின்பிங் கூறியுள்ளார்.

ட்ராகன் மற்றும் யானை நடனத்தை அடைவது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஒரே சரியான தேர்வாகும்.

இது இரு நாடுகளினதும், அவற்றின் மக்களின் அடிப்படை நலன்களுக்காக உள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.