துருக்கிய ஒத்துழைப்புடன் முன்னேறி வரும் சிரிய போராளிகள்

Sunday, 13 October 2019 - 13:33

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
வடகிழக்கு சிரியாவில் உள்ள எல்லை நகரான ரஸ் அல் ஏயின் நோக்கி, துருக்கிய ஒத்துழைப்புடன் சிரிய போராளிகள் முன்னேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நகரின் மத்திய பகுதியினை கைப்பற்றியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ள போதிலும், அதனை குர்திஷ் ஆயுத படை தரப்பினர் மறுதலித்துள்ளதுடன், தாம் அவர்களுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

துருக்கியின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட சிரிய குர்திஷ்ஷிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நான்காவது நாளாக இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு துருக்கி அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள போதிலும், துருக்கியின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை உடனடியாக நிறுத் தவறும் பட்சத்தில் மேலதிக பொருளாதார தடைகளை துருக்கிக்கு எதிராக அமுல் படுத்துவது குறித்து அமெரிக்க ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இராணுவ நடவடிக்கைகள் மேலும் உக்கிரம் அடையும் நிலையில், அதிக அளவில் பொது மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர, குர்திஷ் சிறைகூடங்களில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.