அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..

Monday, 14 October 2019 - 12:58

%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+35+%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..
ஹகிபிஸ் புயல் சீற்றம் காரணமாக ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்தங்களால் அந்த நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 17 பேர் காணாமால் போயுள்ளதாகவும், 100 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தாக்கிய புயல் தற்போது ஜப்பானின் தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புயலை அடுத்து ஏற்பட்ட மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளத்தினால் டோக்கியோவின் தென் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன

இதனால் ஜப்பானில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் ஜப்பானில் புயல் தாக்கிய இடங்களில் 3 இலட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் , பலர் குடிநீர் இன்றி சிரமப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு 27 ஆயிரம் காவற்துறையினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.