300 க்கும் மேற்பட்டோர் கைது..

Thursday, 17 October 2019 - 13:28

+300+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Dark Web   எனப்படும் உலகின் மிகப்பெரிய இருண்ட வலை சிறுவர் துஷ்பிரயோக தளம் ஒன்று அகற்றப்பட்டதைத் தொடர்ந்து 300 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தளத்தில் 200,000க்கும் மேற்பட்ட காணொளிகள் இருந்ததாகவும்,  அவை மொத்தமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறுவர் பாலியல் குற்றங்கள் தொடர்பான பிரிட்டனின் விசாரணையில் அதன் இருப்பை வெளிப்படுத்திய பின்னர் கடந்த ஆண்டு இது மூடப்பட்டது.

எனினும், நேற்றைய தினம் 38 நாடுகளில் சந்தேகத்திற்கிடமான பயனர்கள் 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தளத்தின் உரிமையாளரான தற்போது சிறையில் உள்ள தென்கொரியாவைச் சேர்ந்த 23 வயதான ஜோங் வூ சோன்மீது அமெரிக்க அதிகாரிகள் ஒன்பது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜேர்மனி, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்தக் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டனின் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.