35 வெளிநாட்டவர்கள் பலி...

Thursday, 17 October 2019 - 13:11

35+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
சவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் 35 வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

அத்துடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி அரேபியாவின் மதீனா நகரில் நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் 39 வெளிநாட்டவர்கள் யாத்திரை மேற்கொண்ட நிலையில், 35பேர் பலியாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.