ப்ரியங்க பெர்னாண்டோவுக்கு வழக்கு...

Friday, 18 October 2019 - 7:51

%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
இலங்கையின் இராஜதந்திரியும், பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான செயற்பட்ட பிரிகேடியர் ப்ரியங்க பெர்னாண்டோவுக்கு, அந்த நாட்டு அதிகாரிகளினால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, குறித்த வழக்கு இன்று முதல் பிரிட்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் இலங்கையின் சுதந்திர தினத்தின்போது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிககாரியலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் நோக்கில் சமிக்ஞை செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அதில் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்தார்.
 
எவ்வாறிருப்பினும், பின்னர், பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் ஊடாக வெளியிடப்பட்ட பிடிஆணை உத்தியோகபூர்வமாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
அது தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் செயற்படும் முறைமை மற்றும் அது தொடர்பான முழுமையான செயற்பாட்டை மீள பரிசீலனைக்கு உள்ளாக்குமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த நிலையில், ப்ரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கை ஆரம்பித்திலிருந்து மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்க அந்த நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை இணங்கியுள்ளதாக லண்டனில் உள்ள எமது செய்தித் தொடர்பாளர் ஜனக அலகப்பெரும தெரிவித்துள்ளார்.