சற்று முன்னர் இடம்பெற்ற விடயம்..!

Friday, 18 October 2019 - 9:28

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில், அதன் தவிசாளரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உட்பட இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமது ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்பட்டமை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.