மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் டொலர் நட்டஈட்டை வழங்குமாறு உத்தரவு..

Friday, 18 October 2019 - 13:16

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..
அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள் மற்றும் அந்த நாட்டின் கேந்திர நிலையங்களை இலக்குவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையரான பட்டதாரி பயிலுநர் மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் டொலர் நட்டஈட்டை வழங்க அந்த நாட்டு அரசியல்வாதி ஒருவருக்கு நேர்ந்துள்ளது.
 
அவுஸ்திரேலியாவில் உள்ள நாளிதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் உஸ்மன் கவாஜாவின் சகோதரரான ஹர்ஸலான் கவாஜா மற்றும் இலங்கையரான மொஹமட் நிஸாம்டீன் ஆகியோர் தாக்குதலை திட்டமிட்டதாக போலி சாட்சி முன்வைக்கப்பட்டிருந்ததாக பின்னர் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, சிட்னி – ஒபேரா கலையரங்கு, தொடருந்து நிலையம் மற்றும் காவல்துறை நிலையம் ஒன்று என்பனவற்றின் மீது தாக்குதல் நடத்த நிஸாம்டீன் திட்டமிட்டிருந்ததாக அரசியல்வாதியான மார்க் லெத்தம் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

நிஸாம்டீன் மற்றும் அவரது உதவியாளர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து நிஸாம்டீன் விடுவிக்கப்பட்டதுடன், அந்த ட்விட்டர் பதிவை அகற்றுவதற்கு நியூசவுத்வேல்ஸ் பிராந்தியத்தின் அரசியல் தலைவரான மார்க் லெத்தம் நடவடிக்கை எடுக்கவில்லை.

நிஸாம்டீனுக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மையானது என தாம் நம்புவதாக அவர் குறித்த நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையின் பட்டதாரி பயிலுநர், குற்றமற்றவர் எனவும், அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும், அடுத்த தினத்தில் மார்க் லெத்தம் குறிப்பிட்டிருந்தார்.
 
எனினும், தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில், மார்க் லெத்தமுக்கு எதிராக அவுஸ்திரேலிய பிராந்திய நீதிமன்றில் நிஸாம்டீன்  முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இரு தரப்பு சட்டத்தரணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, குறித்த முறைப்பாட்டை நீக்கிக் கொண்டுள்ளனர்.

இதற்காக, நிஸாம்டீனுக்கு ஒரு இலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த பணம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசியல்வாதியின் காரியாலயத்தினால் தகவல் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.