கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரே காரணம்

Friday, 18 October 2019 - 13:20

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரே காரணம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்தினர், ஜெயலலிதா மீது பொய்யான வழக்குகளை தொடுத்தமையால்தான் அவர் சிறைக்கு சென்றார்.
 
அதில் விடுதலையாகி வெளியே வந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்கள்.
 
இவ்வாறாக அவருக்கு மன உளைச்சல் கொடுத்ததாலும், சிறைக்கு சென்றதாலும்தான், ஜெயலலிதாவினால் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலாமல்போனதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
இவற்றின் அடிப்படையில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.