யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள துருக்கி இணக்கம்..

Friday, 18 October 2019 - 21:54

+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
அமெரிக்க பிரதி ஜனாதிபதி மைக் பென்சிற்கும் துருக்கிய ஜனாதிபதி ரீசெப் டெய்யிப் எர்டோகனிற்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, வட சிரியாவில் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள துருக்கி இணங்கியுள்ளது.

இதனையடுத்து குர்திஷ் தலைமையிலான ஆயுத படையினர் யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதற்கான சந்தப்பம் ஏற்பட்டுள்ளது.

யுத்த நிறுத்தம் ஐந்து நாட்களுக்கு தொடரும் நிலையில் குர்திஷ்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான் உதவிகளை அமெரிக்கா முன்னெடுக்கும் என அமெரிக்க பிரதி ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், குர்திஷ் ஆயுததாரிகள் இந்த ஏற்பாட்டிற்கு முழு அளவில் இணக்கம் தெரிவிப்பார்களா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி ஒப்பந்தம் தமது தரப்பினரால் எல்லை நகரங்களான ரஸ் அல்-எயின் மற்றும் ரால் அப்யாட் இடையே முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக குர்திஷ்ஷின் தளபதி தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட பிரதேசங்களிலேயே கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை, ரஸ் அல்-எயின்னில் தொடர்ந்தும் மோதல்கள் தொடர்வதாக பிருத்தானியாவை தளமாக கொண்டுள்ள சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.