சிரியாவிலுள்ள ஆயுததாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துருக்கி

Sunday, 20 October 2019 - 19:45

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+
சிரியாவில் நிலைகொண்டுள்ள குர்திஷ் ஆயுததாரிகளை முற்றாக அகற்றுவதற்கு அமெரிக்கா உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என துருக்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்கா துருக்கியுடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டில் இருந்து தவறும் பட்சத்தில், சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு துருக்கியை இட்டு செல்லும் என ஜனாதிபதி ரயீப் ஈர்டோகன் எச்சரித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை துருக்கிய ஜனாதிபதிக்கும் அமெரிக்க பிரதி ஜனாதிபதி மைக் பென்சிற்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது, 5 நாட்களுக்கு யுத்த நிறுத்தத்தை கொண்டு வர துருக்கி இணங்கியிருந்தது.

இந்த காலப்பகுதியினில், சிரியாவின் வட கிழக்கு பிரதேசங்களில் உள்ள குர்திஷ் ஆயுததாரிகள் முற்றாக அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கான உத்தரவாதம் அமெரிக்க பிரதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய அமெரிக்கா செயல்பட தவறும் பட்சத்தில், சிரியாவில் உள்ள ஆயுததாரிகள் முற்றாக அழிக்கப்படுவர் எனவும் துருக்கிய ஜனாதிபதி ரயீப் ஈர்டோகன் எச்சரித்துள்ளார்.