மத்தல விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இரண்டு விமானங்கள்

Monday, 21 October 2019 - 10:15

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்ட இரண்டு விமானங்கள் சீரற்ற வானிலை காரணமாக மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

ரியாத்தில் இருந்து வந்த யு.எல். 266 மற்றும் குவைத்திலிருந்து வந்த யு.எல். 230 ஆகிய இரண்டு விமானங்களுமே இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமைத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வானிலை சீரானதன் பின்னர் மீண்டும் அவ்விரு விமானங்களும் மத்தல விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.