மாற்று வழியை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை....!

Monday, 21 October 2019 - 10:30

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88....%21
புத்தளம் மன்னார் பிரதான வீதியின் சப்பாத்து பாளம் பகுதி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியினூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாஓயா பெருக்கெடுத்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாஓயா வழமையான நீர்மட்டத்தினை விட 8 அடி உயர்ந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் - புத்தளம் - எழுவன்குளம் ஊடக பயணிக்கும் சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.