சற்று முன் ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு..!

Monday, 21 October 2019 - 12:33

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%21
முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமைக்;காக, பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரர் உட்பட 4 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில், பௌத்த பிக்கு ஒருவரின் பூதவுல், நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்தி சிறிஸ்கந்தராஜா தாக்கல் செய்திருந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த ஞானசார தேரர் மற்றும் முல்லைத்தீவு பிராந்தியத்துக்கு பொறுப்பான காவற்துறை பிரதி மா அதிபர் மற்றும் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் நொவம்பர் மாதம் 8ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, உத்தரவிடப்பட்டது.