விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து..

Monday, 21 October 2019 - 13:25

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பொதுவான மற்றும் இராணுவ உறவு சிறந்த நிலையில் உள்ளது.

எனினும் வர்த்தக உறவில் இரண்டு தரப்பிற்கும் இடையே பல பிரச்சினைகள் உள்ளன.

உருக்கு அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் மீதான கடும் வரி விதிப்பு நீக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

தங்களது உற்பத்தி பொருட்கள், வாகனங்கள் மற்றும் பொறியியல் துறை பொருட்களுக்கு பாரிய அளவிலான சந்தை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.

இந்த பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.