பிரித்தியேக தீவு ஒன்றில் குடியமர்த்துவதற்கு தீர்மானம்

Monday, 21 October 2019 - 21:30

+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பங்காளதேசிற்கு இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகளை பிரித்தியேக தீவு ஒன்றில் குடியமர்த்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மியான்மரில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா ஏதிலிகள் பங்களதேஸிற்கு இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்கள் பங்களதேஸின் கரையோரப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சன நெருக்கடி நிலைமைகளை தவிர்க்கும் நோக்கில் அவர்களை பிரித்தியேக தீவு ஒன்றில் தங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பங்களதேஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஏதிலிகளுக்காக ஓதுக்கப்பட்டுள்ள குறித்த தீவானது மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதியாகும் என தெரிவித்து அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.