தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

Wednesday, 23 October 2019 - 9:39

+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88
மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் யுகம் தமது ஆட்சியில் மீண்டும் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி – பட்டபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியது மாத்திரமின்றி, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அதற்கான பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுத்தார்.

தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

அதன்காரணமாகவே தங்களது ஆட்சி காலத்தில் தீவிரவாதம் தலைதூக்கவில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

எனினும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவத்தினரின் அபிமானத்தையும், மனநலனையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

சர்வதேசத்தில் உள்ள பல நாடுகளுடன்; இணைந்து இந்த அரசாங்கம் அன்று யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றங்கள் முன் நிறுத்த திட்டமிட்டது.

தேசிய பாதுகாப்புக்காக எந்தவித முன்னுரிமையும் வழங்கப்படவில்லை.

அது தொடர்பான போதிய தெளிவும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சில சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அடிபணிந்து செயற்படும் அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையிடம்; எப்போதும் நாட்டின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது.

மீண்டும் நாட்டின் இறைமை, சுபீட்சம், மக்களின் பாதுகாப்பு என்பவற்றை தங்களது அரசாங்கத்தால் மாத்திரமே உறுதிசெய்ய முடியும் என  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு கிடைத்த 52 நாட்கள் பிரதமர் பதவியின்போது, உரத்தின் விலையை மீண்டும் 350 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகில் முதல் முறையாக விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்திய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.