ரசிகர்களிடம் ஆசி பெற்றுச்சென்ற "தளபதி 64" பட நாயகி

Thursday, 07 November 2019 - 15:14

%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%22%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+64%22+%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அங்கு ஏற்பட்டிருக்கும் காற்று மாசு காரணமாக படத்தின் படப்பிடிப்புக்கு பெரும் தடையாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் நடிகை மாளவிகா மோகன் இந்த போர்ஷனில் பங்கேற்க உள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"வணக்கம் டெல்லி! மீண்டும் படப்பிடிப்பு, தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இன்று ஆரம்பிக்கிறேன் உங்கள் அனைவரது அன்பும் தேவை!" என மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனைக்கண்ட விஜய் ரசிகர்கள்.. அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.